For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சம்பாதிக்கும் திறன் இருந்தும் வேலைக்கு செல்லாமல் பிரிந்து சென்ற கணவரிடம் பராமரிப்பு தொகை கேட்பதா..? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

10:19 AM Nov 24, 2023 IST | 1newsnationuser6
சம்பாதிக்கும் திறன் இருந்தும் வேலைக்கு செல்லாமல் பிரிந்து சென்ற கணவரிடம் பராமரிப்பு தொகை கேட்பதா    ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement

டெல்லியில் மனைவியை பிரிந்து வாழும் நபர், குடும்ப பராமரிப்பு செலவாக மனைவிக்கு மாதம் ரூ.21,000 வழங்கி வந்தார். ஆனால், மனைவியின் வாழ்வியல் சூழலில் எந்தவித மாற்றமும் நிகழாத நிலையில், பராமரிப்பு தொகையை மனைவியின் கோரிக்கையை ஏற்று ரூ.30,000 மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.51,000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட கணவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவில், தற்போது மாத சம்பளமாக ரூ.47,000 மட்டுமே பெற்று வருகிறேன். இதைக்கொண்டு குடும்பத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தனது பிரிந்து வாழும் மனைவிக்கு மாதம் ரூ.21,000இல் இருந்து ரூ.30,000 ஆக வழங்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தனது மனைவி தற்போது ரூ.25,000 சம்பளத்தில் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தான் சமூக சேவை மட்டுமே செய்து வருகிறேன். இதற்காக சம்பளம் எதுவும் பெறவில்லை என்று கூறி பராமரிப்பு தொகையை அதிகரிக்க கோரினார். அதனை ஏற்று விசாரணை நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் கணவருக்கு சாதமாகமான தீர்ப்பை வழங்கினர்.

இது தொடர்பான உத்தரவில், இந்த வழக்கில் கணவரை பிரிந்து வாழும் மனைவி, சம்பாதிக்கும் திறனை பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ள போதும் வேலைக்கு செல்ல விரும்பாமல் சும்மா இருப்பதை அவராகவே தேர்ந்தெடுத்துள்ளார். ஆகையால், குடும்ப பராமரிப்பு செலவுகளை சமாளிப்பதற்கான வேலை வாய்ப்பைப் பெற நேர்மையான முயற்சிகள் எதையும் செய்யாதபோது, செலவுகளை ஒருதலைப்பட்சமாக கணவர் மீது மட்டுமே சுமத்துவதை அனுமதிக்க முடியாது.

அதேசமயத்தில் அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. ஆகையால், இந்து திருமணச் சட்டத்தின் கீழ், பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் செலுத்த வேண்டிய மாதப் பராமரிப்பை ரூ.30,000-லிருந்து ரூ.21,000 ஆகக் குறைத்து உத்தரவிடப்படுகிறது“ என்று தெரிவித்தனர்.

Tags :
Advertisement