அதிர்ச்சி!. விஷமாக மாறிய பள்ளி உணவு!. 45 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு!. மருத்துவமனையில் சிகிச்சை!
karnataka: கர்நாடகா பாவகடா அருகே பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட கடலை மிட்டாய் சாப்பிட்ட 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நிலை பாதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கர்நாடகா மாநிலம் தும்கூர் பாவகடாவின் கோன்னகுரிகே கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை; முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. அதே போன்று, நேற்று முன் தினம், மாணவர்களுக்கு கடலைமிட்டாய் வழங்கப்பட்டுள்ளது.
அதை சாப்பிட்ட 45க்கும் மேற்பட்ட மாணவர்கள், வாந்தி, வயிற்று வலியால் அவதிப்பட்டனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களின் உடல் நிலை குறித்து, மருத்துவர்களிடம் தகவல் கேட்டறிந்தனர். அசம்பாவிதத்துக்கு என்ன காரணம் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: இந்தியாவில் பாம்புக்கடியை “அறிவிக்கக்கூடிய நோயாக” (Notifiable Disease) அறிவித்தது மத்திய அரசு!.