For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சம்பல் மசூதி விவகாரம் : சர்வே உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை.. அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுரை..!!

Sambhal mosque survey case: Supreme Court asks Jama Masjid committee to move HC, directs trial court to not proceed with hearing
01:14 PM Nov 29, 2024 IST | Mari Thangam
சம்பல் மசூதி விவகாரம்   சர்வே உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை   அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுரை
Advertisement

சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை ஆய்வு செய்ய அனுமதி அளித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக மனுதாரர்களைக் கேட்டுக் கொண்டதுடன், வழக்கு முடியும் வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. மேலும், சர்வேயர்கள் மசூதிக்கு சென்றதில் இருந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமைதி நிலவுவதை உறுதி செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டது.

Advertisement

என்ன விவகாரம்? உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதி உள்ள இடத்தில் கோயில் ஒன்று அமைந்திருந்தது. அதன்பின்னர் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டது எனக் கூறி சம்பலில் உள்ள  உரிமையியல் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்து மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அச்சமயத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் மக்கள் இத்தகைய செயலில்  ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் கல் வீசுவதை நிறுத்துமாறு சம்பலில் உள்ள உள்ளூர் மக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இருப்பினும் அப்பகுதியில் இருந்த மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமான சூழலும் நிலவியது.

Read more ; வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிடுங்க.. உடலில் என்னென்ன மேஜிக் நடக்கும்னு பாருங்க..

Tags :
Advertisement