For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’30 விநாடிக்கு ரூ.2 லட்சம்’..!! ’உங்களுக்கு ஓகேன்னா வரேன்’..!! அதிரவிட்ட இன்ஸ்டா பிரபலம் அமலா சாஜி..!!

05:10 PM Dec 20, 2023 IST | 1newsnationuser6
’30 விநாடிக்கு ரூ 2 லட்சம்’     ’உங்களுக்கு ஓகேன்னா வரேன்’     அதிரவிட்ட இன்ஸ்டா பிரபலம் அமலா சாஜி
Advertisement

இன்ஸ்டாகிராமில் 30 செகன்ட்ஸ் வீடியோவுக்கே இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டு அதிரவிட்டுள்ளார் அமலா சாஜி.

Advertisement

இன்ஸ்டாகிராமில் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் அமலா சாஜி. இந்நிலையில், ’அரணம்’ என்ற படத்தில் நடனமாட அமலா சாஜி ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, அந்தப் படத்தின் நாயகன் பிரியன் மேடை விழாவில் பேசி இருக்கிறார். இவர் ‘மஸ்காரா போட்டு மயக்குறியே’, ‘மக்காயாலா’ போன்ற பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். இவர்தான் தற்போது ‘அரணம்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அமலா சாஜி குறித்து அவர் பேசியுள்ளார். அதில், “கேரளாவில் நடனமாடும் பெண் ஒருவர் 2 லட்சம் சார் என்றார். ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘30 செகன்ட்ஸ் சார்’ என்றார். இதற்கு 2 லட்சமா? இதை எங்கள் கலைஞரிடம் கொடுத்தால் விடிய விடிய வேலை பார்ப்பார்கள். அவர் வேறு யாருமில்லை நம்ம அமலா ஷாஜிதான்” என்றார்.

இதுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அமலா ஷாஜிக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுக்கின்றனர். "30 விநாடிக்கு இரண்டு லட்சம் கேட்கிறார் என்றால், அந்த பிரபலத்தை கடின உழைப்பின் மூலம் அவர் கொண்டு வந்திருக்கிறார். உங்கள் பட பப்ளிசிட்டிக்குத் தானே அவரைக் கேட்கிறீர்கள்? உங்களால் கொடுக்க முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்" எனக் கூறுகின்றனர்.

Tags :
Advertisement