அடி தூள்...! பெண்களுக்கு இந்த முறை தீபாவளிக்கு முன்பே ரூ.1,000 உரிமைத் தொகை...! அரசு ஆலோசனை
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்த 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்களை தமிழக அரசு பாரசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே இரண்டு தவணை உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12-ம் தேதிக்கு முன்பாகவே ரூ.1000 உரிமைத் தொகையை விடுவிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.06 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் மேல் முறையீடு செய்து விண்ணப்பித்த நபர்கள் kmut.tn.gov.in/login.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை வைத்து என்ன காரணதிற்காக பணம் வரவில்லை என நீங்களே தெரிந்து கொள்ளலாம். பணம் வரவில்லை என்றால் தமிழக முதல்வரின் உதவி மைய எண் 1100-ஐ தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். அல்லது இ-சேவை மையங்களிலும் தங்களின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம்.