For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்!. இலக்கை அடைய தவறிவிட்டேன்!. தோல்வியை ஒப்புக்கொண்ட நிதின் கட்கரி!.

06:17 AM Dec 13, 2024 IST | Kokila
இந்தியாவில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்   இலக்கை அடைய தவறிவிட்டேன்   தோல்வியை ஒப்புக்கொண்ட நிதின் கட்கரி
Advertisement

Nitin Gadkari: இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவையில் வியாழக்கிழமை நடந்த சாலை விபத்துகள் குறித்த விவாதத்தில், கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நிதின் கட்கரி, "விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பதை மறந்து விடுங்கள். விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை. "சாலை விபத்துகள் குறித்து நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது என் முகத்தை மறைத்துக் கொள்ளவே முயல்வேன்" என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், சாலை போக்குவத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்றபோது சாலை விபத்துகளை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று தான் இலக்கு நிர்ணயித்ததாகவும். ஆனால் அந்த இலக்கை அடைய தவறிவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார். சாலை விபத்துகள் குறித்து நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது என் முகத்தை மறைத்துக் கொள்ள முயல்வேன். இந்தியாவில் மனித நடத்தைகள் மேம்படுவதற்கு பல விஷயங்கள் மாற வேண்டும், சமூகம் மாற வேண்டும், சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது குடும்பமும் ஒரு பெரிய விபத்து ஒன்றில் சிக்கினோம். நான் நீண்ட நாட்கள் மருத்துவனையில் இருக்க வேண்டியது இருந்தது.

கடவுளின் கருணையால் நானும் எனது குடும்பத்தினரும் காக்கப்பட்டோம். எனவே, விபத்து பற்றி எனக்கும் தனிப்பட்ட அனுபவம் உண்டு. சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்தி வைத்திருப்பதே சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். பல லாரிகள் லேன் விதிகளை பின்பற்றுவதில்லை. இந்தியாவில் பேருந்து பாடி தயாரிப்பதில் சர்வதேச தரத்தினை பின்பற்றும்படி உத்தரவிட்டுள்ளேன். பேருந்து ஜன்னல் அருகே ஒரு சுத்தியல் இருக்க வேண்டும். அப்போது தான் விபத்தின்போது ஜன்னலை எளிதாக உடைக்க முடியும்" என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் 1.78 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேர் 18 - 34 வயதில் உள்ளவர்கள். அதிக விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது என்றாலும், நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 23,000-க்கும் அதிகமானோர் (மொத்த சாலை விபத்துகளில் 13.7 சதவீதம்) சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 18,000-க்கும் அதிகமானோர் (10.6 சதவீதம்) உயிரிழக்கின்றனர்.

மகாரஷ்டிராவில் இந்த எண்ணிக்கை 15,000+ ஆக (மொத்த உயிரிழப்பில் 9 சதவீதம்) உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் 13,000 (8 சதவீதம்)க்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்படுகிறது. நகரங்களின் பட்டியலில் 1,400 உயிரிழப்புகளுடன் டெல்லி முதலிடத்திலும், 915 உயிரிழப்புகளுடன் பெங்களூரு இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஜெய்பூரில் 850 சாலை விபத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன” என்று தெரிவித்தார்.

Readmore: மர்ம நோயால் 31 குழந்தைகள் பலி!. 500 -ஐ நெருங்கிய பாதிப்பு எண்ணிக்கை!. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Tags :
Advertisement