For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

RIP | ’அஞ்சாதே’ திரைப்பட நடிகர் ஸ்ரீதர் காலமானார்..!! சோகத்தில் திரையுலகம்..!!

01:05 PM Feb 10, 2024 IST | 1newsnationuser6
rip   ’அஞ்சாதே’ திரைப்பட நடிகர் ஸ்ரீதர் காலமானார்     சோகத்தில் திரையுலகம்
Advertisement

அஞ்சாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதர் என்ற துணை நடிகர் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமானார்.

Advertisement

இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே திரைப்படத்தில் கால் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தில் தன் மகன் கண் முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் கதாபாத்திரத்தை மிக எதார்த்தமாக நடித்திருந்தார். அவரின் அந்த நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அது தவிர முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இரவு 1.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். இவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement