முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மசூதியில் அரங்கேறிய பயங்கரம்.! தொழுகைக்காக சென்ற முன்னால் காவல்துறை அதிகாரி படுகொலை.!

07:07 PM Dec 24, 2023 IST | 1newsnationuser4
Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி மசூதியில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக மத்திய அரசில் ஆட்சி அமைத்த பின்பு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தன .

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுத்த போது முகமது ஷஃபி என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர் 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு சமூக சேவை மற்றும் மசூதிகள் பராமரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை அதிகாலை தொழுகைக்காக அழைப்பு கொடுக்க சென்றபோது பயங்கரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் காவல்துறை அதிகாரி மசூதியில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
indiajammu and kashmirMasjidRetired Police OffIcer Shot DeadTERRORIST ATTACK
Advertisement
Next Article