தினமும் தொப்புளில் 2 சொட்டு எண்ணெய் தேய்த்தால் போதும்.. இனி இந்த வலி உங்களுக்கு இருக்காது..
நாள் தோறும் பரபரப்பாக இருக்கும் நாம். இரவில் தூங்குவதற்கு முன் செய்யும் ஒரு சில விஷயங்கள், உடலுக்கு பல நன்மைகளை தரும். அந்த வகையில் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக கடைபிடித்த ஒன்று தான் தொப்புளில் தினமும் எண்ணெய் வைப்பது. நாம் தொடர்ந்து தொப்புளில் எண்ணெய் வைப்பதால், பல பலன்களை அடைய முடியும். ஆம், இப்படி தினமும் தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் சில முக்கியமான பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் தான். இதனால் நாம் தொப்புளில் தொடர்ந்து எண்ணெய் வைப்பதால், ஃபேட்டிக்சின் மூலமாக, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இப்படி செய்வதால் அவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கும். எண்ணெய் வைப்பதால் நரம்புகளை சுத்தமாவது மட்டும் இல்லாமல், நரம்புகள் மென்மையாக செயல்பட உதவுகிறது.
தொடர்ந்து தொப்புளில் எண்ணெய் வைப்பதால், காய்ச்சலுக்கு எதிராக போராட வலிமையை அளிக்கிறது. மேலும், மூட்டு வலி, உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும். அது மட்டும் இல்லாமல், தினமும் எண்ணெய் வைப்பதால், தொப்புளின் உள்ளே உள்ள கழிவுகள் நீங்கிவிடும். இப்படி தினமும் எண்ணெய் வைப்பதால், உடல் மட்டும் இன்றி, சருமத்தையும் மென்மையாகப் பராமரிக்க முடியும். இந்த வகையில், தினமும் எண்ணெய் வைப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கம், இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் 2 முதல் 3 சொட்டு எண்ணெய் தேய்த்தால் போதும்.
Read more: குளிர் காலத்தில் பாடாய் படுத்தும் ஜலதோஷம்: சரிசெய்ய இந்த ஒரு டீ போதும்..