கடன் தொல்லை தீர: வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு இந்த பரிகாரத்தை செய்யுங்க.!
பொதுவாக லட்சுமி தேவியை முழுமனதுடன் பிரார்த்தனை செய்து வேண்டி வந்தால் அம்மனின் முழு அருளும் நம் மீது விழும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. நாம் செய்யும் காரியங்களை பொறுத்தே வாழ்க்கையில் நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும். ஒருவர் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் லட்சுமி தேவியின் அருளால் மகிழ்ச்சி மற்றும் மன அமைதி கண்டிப்பாக கிடைக்கும்.
மேலும் லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமை அன்று வேண்டி பரிகாரம் செய்து வந்தால் வீட்டில் நன்மைகள் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலரும் இதை பின்பற்றி பலனடைந்து வருகின்றனர். செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவிக்கு என்னென்ன பரிகாரங்கள் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை குறித்து பார்க்கலாம்?
லட்சுமி தேவிக்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் பிடித்தமான நிறமாகும். எனவே சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மாலை வாங்கி வெள்ளிக்கிழமை அன்று அணிவித்து வேண்டி வர வேண்டும். வீட்டில் சுத்தமான நெய் தீபம் ஏற்றி லட்சுமி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். லட்சுமி தேவியை தரிசிக்கும் போது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து தரிசிக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு லட்சுமி தேவியை தரிசித்து பரிகாரம் செய்து வந்தால் வீட்டில் நன்மைகள் நிகழும். பாவங்கள் விலகி மகிழ்ச்சி பெருகும், நோய் நொடிகள் தீரும், கடன் தொல்லை நீங்கும், குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.