குழந்தை பிறப்பிற்கு பின் முதுகுவலியால் அவதிபடுறீங்களா.! இதை சாப்பிட்டால் ஒரே வாரத்தில் முதுகு வலி குறையும்.!?
பொதுவாக குழந்தை பிறப்பு என்பது பெண்களின் வாழ்வில் மறு ஜென்மம் என்று பெரியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். குழந்தை கருவாக வயிற்றில் உருவான காலகட்டத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை பல சவால்களையும், நோய்களையும் தாய் எதிர் கொண்டு வருகிறார். அப்படியிருக்க குழந்தை பிறந்த பின்பும் தாய்க்கு பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பல தாய்மார்கள் முதுகுவலியால் அவதியுற்று வருகின்றனர்.
மேலும் நீண்ட நேரம் அமர்ந்து குழந்தைகளுக்கு பால் குடுப்பதாலும், தாய் பால் கொடுப்பதன் மூலம் நம் உடலில் உள்ள ஊட்டசத்துகள் உறிஞ்சப்பட்டு முதுகு வலி, மூட்டு வலி போன்ற வலிகள் ஏற்படுகின்றன. இதற்கு பல மாத்திரை, மருந்துகள் எடுத்து வந்தாலும் வலி அந்த நேரத்தில் குறையுமே தவிர நிரந்தரமாக சரியாகாது. உணவில் ஊட்டச்சத்தான பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலமே முதுகு வலி குறையும். இதன்படி உளுந்து கால்சியம் நிறைந்த ஒரு உணவுப் பொருள். இதை கஞ்சியாக செய்து சாப்பிடுவதன் மூலம் முதுகு வலி விரைவில் குணமாகும்.
உளுந்தங்கஞ்சி செய்முறை
உளுந்து - 1கப்
கருப்பட்டி - 100கிராம்
ஏலக்காய் - 2
முதலில் உளுந்தை கழுவி குக்கரில் மூன்று விசில் வரும் வரை நன்றாக வேக விட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் ஏலக்காய் சேர்த்து பாகு பதத்திற்கு கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு உளுந்து வெந்ததும் அதில் கொதிக்க வைத்த கருப்பட்டியை ஊற்றி கலந்து விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கினால் உளுந்தங்கஞ்சி தயார்.
இந்த உளுந்தங்கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். மூட்டு தேய்மானத்தினால் அவதியுறும் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த உழுந்தங்கஞ்சியை குடிப்பதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் கிடைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.