வடகிழக்கு பருவமழை... 24 மணி நேரமும் பாதிப்புகள் தொடர்பாக புகார் தெரிவிக்க மொபைல் எண்கள் வெளியீடு...!
வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை. காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள், சார்ந்த அலுவலர்களுடன் 24×7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல். கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க கீழ்காணும் தொலைபேசி எண்கள் /அவசர கால உதவி எண்கள் மற்றும் சமூக வலைத்தளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.
வடகிழக்கு பருவமழை-2023 பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், உள்ளூர் வாசிகள் அரசு அலுவலர்களுடன் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடினை மட்டும் பின் தொடருமாறும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.