முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குழந்தைகளுக்கு பிடித்த ரசமலாய்.! 10நிமிடத்தில் ஈசியாக எப்படி செய்யலாம்.!?

07:32 AM Feb 10, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே மிகவும் பிடிக்கும். அப்படியிருக்க பாலாடையை வைத்து செய்யப்படும் ரசமலாயை பிரெட் துண்டுகளை வைத்து இன்ஸ்டென்டாக எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் இதை செய்து கொடுத்து அசத்துங்க.

Advertisement

தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள்- 5, பால்- 1 லி, முந்திரி- 20, சர்க்கரை- 6 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ- 5, ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன், நெய்- 2 ஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பால் சுண்டி வரும் போது பத்து முந்திரிப்பருப்பை எடுத்து பொடி செய்து பாலில் சேர்க்க வேண்டும். மீதி முந்திரி பருப்பை நறுக்கி துண்டுகளாக பாலில் சேர்க்கவும். பின்பு சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.

பின்பு பிரட் துண்டுகளை எடுத்து ரசமலாய் வடிவத்திற்கு வட்டமாக வெட்டி நெய்யில் பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் கொதிக்க வைத்து இறக்கிய வைத்த பாலில் இந்த பிரட் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு பின்பு எடுத்து பரிமாறினால் குழந்தைகளுக்கு பிடித்த இன்ஸ்டன்ட் ரசமலாய் தயார்.

Tags :
InstantSweetரசமலாய்
Advertisement
Next Article