For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தை பெற்றுக் கொடுக்க வந்த இடத்தில் பலாத்காரம்..!! 9-வது மாடியில் இருந்து விழுந்த பெண் மரணம்..!!

The shocking incident of a woman who tried to escape from a surrogate mother who was raped and died after falling from the 9th floor has caused a stir.
11:29 AM Nov 29, 2024 IST | Chella
குழந்தை பெற்றுக் கொடுக்க வந்த இடத்தில் பலாத்காரம்     9 வது மாடியில் இருந்து விழுந்த பெண் மரணம்
Advertisement

வாடகை தாயாக குழந்தை பெற்று கொடுக்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த நிலையில், அங்கிருந்து தப்ப முயன்ற பெண் 9-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தெலங்கானா மாநிலம் ராயதுர்கம் மை ஹோம் பூஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜேஷ்பாபு (54). இவருக்கு குழந்தை இல்லை. இதனால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளனர். இதற்காக சந்தீப் என்ற புரோக்கர்கள் மூலம் ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் சிங் மற்றும் அஷ்விதா (25) தம்பதியை சந்தித்தனர். அவர்களுடன் செயற்கை முறையில் ராஜேஷ்பாபுக்கு குழந்தை பெற்று கொடுத்தால் ரூ.10 லட்சம் பெற்று தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதன்படி, இருவரும் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி 4 வயது மகனுடன் ஹைதராபாத் வந்துள்ளனர். பிறகு அஷ்விதாவை 9-வது மாடியில் உள்ள ராஜேஷ்பாபு குடியிருப்பில் வைத்துக் கொண்டு அவரது கணவர் சஞ்சய் சிங் 7-வது மாடியில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார். ஒருபுறம் செயற்கை முறையில் குழந்தை பெற தேவையான அனுமதிகளை பெறும் பணி நடந்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களாக அஸ்விதாவுக்கு ராஜேஷ் பாபு பாலியல் தொல் லை கொடுத்து வந்திருக்கிறார்.

இதற்கு அஷ்விதா செயற்கை முறையில் வாடகைத் தாயாக மட்டுமே குழந்தை பெற்று தருவேன். உடலுறவுக்கு சம்மதிக்க மாட்டேன் என்று ராஜேஷ்பாபுவிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால், ஒடிசாவுக்குத் திரும்பிச் செல்ல இரண்டு , மூன்று முறை சொன்னாலும், ஒப்பந்தத்தின்படி ஒரு குழந்தையைப் பெற்று கொடுத்தால் பணக் கஷ்டங்கள் நீங்கும் என்று சஞ்சய் சிங் தனது மனைவியை சமாதானம் செய்துள்ளார்.

ஆனால், ராஜேஷ் பாபுவின் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அங்கிருந்து தப்பித்து கணவன் மற்றும் மகனுடன் சொந்த ஊருக்கு செல்ல அஷ்விதா முடிவு செய்தர். இதற்காக ராஜேஷ் பாபுவின் 9-வது மாடி பிளாட்டின் பால்கனியில் இருந்து சேலையைக் கட்டிக்கொண்டு, அதன் வழியாக இரண்டு தளங்கள் கீழே சென்றால் 7-வது மாடியில் உள்ள தன் கணவரின் பிளாட்டை அடையலாம் என்று முடிவு செய்தார்.

இதற்காக புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் 9-வது மாடியின் பால்கனியில் இருந்து இரண்டு புடவைகள் ஒன்றாகக் கட்டப்பட்டு கீழே தொங்கவிட்டு அந்த புடவைகளை பிடித்துக்கொண்டு கீழே இறங்க முயன்றார். அப்போது, கைகள் நழுவி அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராயதுர்கம் போலீசார் அஸ்விதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் அளித்த புகாரின் பேரில், ராஜேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மாதம் ரூ.92,000 சம்பளம்..!!

Tags :
Advertisement