For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரசிகை உயிரிழந்த விவகாரம்.. புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் கைது..!! பரபரப்பு

Pushpa actor Allu Arjun arrested
01:00 PM Dec 13, 2024 IST | Mari Thangam
ரசிகை உயிரிழந்த விவகாரம்   புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் கைது     பரபரப்பு
Advertisement

புஷ்பா வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2 தி ரூல். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பாளருக்கு ஏற்கனவே லாபத்தை கொடுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ரூ.500 கோடி வரையில் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே தியேட்டர் ரைட்ஸ் மற்றும் தியேட்டர் அல்லாத உரிமை அதாவது ஓடிடி என்று ரூ.1085 கோடி வரையில் வசூல் குவித்து சாதனையை படைத்துள்ளது.

Advertisement

இதுவரையில் எந்தப் படமும் இப்படியொரு சாதனையை படைக்கவில்லை. இந்த நிலையில் தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக 12000க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது. இந்த நிலையில் தான் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்திற்கு ஹைதராபாத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 5ஆம் தேதி அதிகாலையில் வெளியான புஷ்பா 2 படத்தை பார்க்க ரசிகர்கள் நள்ளிரவு முதல் நீண்ட நேரம் தியேட்டர் வாசலிலேயே காத்திருந்த சம்பவம் நடைபெற்றது. அதுவும் ஹைதராபாத்தில் பிரபலமான திரையரங்கான சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர். படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முண்டியடித்த போது ஏற்பட்ட நெரிசலில், ரேவதி என்ற ரசிகையும் அவரது மகனும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்களை உடனடியாக துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பூகம்பமாக வெடித்த நிலையில் அந்த ரசிகை ரேவதியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், அல்லு அர்ஜூன், தியேட்டர் மேனேஜ்மெண்ட் மற்றும் பாதுகாப்பு டீம் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டு தொகையை அல்லு அர்ஜுன் வழங்கியுள்ளார். ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா ஐகோர்ட்டில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; 1992-ஐ நினைவுபடுத்தும் நெல்லை கனமழை..!! 32 ஆண்டுகளுகு முன் என்ன நடந்தது?

Tags :
Advertisement