பொரி சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை குறையுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
உடல் எடையை குறைப்பது தற்போது உள்ள கால சுழலில் பெரிய சவாலாக உள்ளது. இதற்காக பலர் பல அறிவுரைகளை கூறுகின்றனர். உடல் எடை குறைப்பு என்று வந்துவிட்டால், சாதாரண மனிதர்கள் கூட மருத்துவர்கள் போல் அறிவுரை கூற ஆரம்பித்து விடுவது உண்டு. இப்படி உடல் எடை குறைப்பை பற்றி பலர் பல ஆலோசனைகளையும் அறிவுரையும் கூறுவதால், எது உண்மை என்றே தெரியாமல் போய் விடுகிறது. அந்த வகையில் தற்போது பிரபலமாக இருக்கும் கருத்துகளில் ஒன்று, பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது தான். பொதுவாக பொரியில் கார்போஹைட்ரேட், இரும்பு சத்து, கால்சியம் சத்துக்கள் உள்ளது.
ஆனால் அரிசியில் இருந்து தான் பொரி தயாரிக்கப்படுகிறது. இதனால் சாதம் சாப்பிடுவதற்கும் பொரி சாப்பிடுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 100 கிராம் சாதத்தை சாப்பிடும்போது வயிறு நிறையும் அளவிற்கு 100 கிராம் பொரி சாப்பிட்டால் இருக்காது. ஆனால் இதில் கலோரிகள் சற்று குறைவு. இதனால் எண்ணெய்யில் பொறித்த, கலப்படம் நிறைந்த மற்ற ஸ்நாக்ஸ்களை ஒப்பிடும் போது, பொரி ஒரு சிறந்த தேர்வு. பொரி சாப்பிட்டு உங்களால் வயிறை நிரப்ப முடியாது. ஆனால் டீ குடிக்கும்போது, நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் நீங்கள் அரிசி பொரியை அளவாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இதனால் தேவையற்ற, எண்ணெய்யில் பொறித்த மற்ற உணவுகளை நீங்கள் சாப்பிடுவதை தவிர்க்க முடியும். இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்காது. ஆனால் அதே நேரத்தில் அரிசி பொரியில், ஓமப்பொடி மிக்சர் தட்டை ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது. அரிசி பொரி சாப்பிடுவதால் உடல் எடை குறையாது, மற்ற நொறுக்கு தீனிகளால் எடை அதிகரிக்காது. பொரியில் சோடியம் அளவு அதிகம் இருப்பதால் அதிக அளவு பொரி சாப்பிட கூடாது.
Read more: வெந்நீரில் குளிப்பவரா நீங்கள்?? கட்டாயம் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்..