நெடுஞ்சாலையில் மோட்டார் வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பை நிர்ணயம்...! மத்திய அமைச்சர் தகவல்..!
நெடுஞ்சாலைகளில் வேக வரம்புக்குள் வாகனம் ஓட்டாவிட்டால் அபராதம் விதிப்பதற்கான வழிமுறைகள்.
மோட்டார் வாகனச் சட்டம் 1988 -ன் பிரிவு 112-ன் படி, அமைச்சகம் ஏப்ரல் 6, 2018 தேதியிட்ட அரசாணை 1522 (இ) மூலம் இந்தியாவில் வெவ்வேறு சாலைகளில் இயங்கும் பல்வேறு வகை மோட்டார் வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பை நிர்ணயித்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988 -ன் பிரிவு 183 -ல் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கும் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மோட்டார் வாகனச் சட்டம், 1988-ல் உள்ள விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவது அந்தந்த மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.
சுற்றுலா, ஆன்மீகத் தலங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 8,544 கி.மீ தொலைவிலான 321 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 10,601 கோடி ரூபாய் செலவில் 296 கிலோ மீட்டர் தொலைவிற்கு 11 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்று மற்ற மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.