இரவு முழுவதும் சிறை..! சிறை வளாகத்தில் காத்திருந்த தந்தை..! நாளை தான் வெளியே வருவார் அல்லு அர்ஜுன்..!
புஷ்பா வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி 12,000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படம் வெளியாவதற்கு முன்தினம் பிரீமியர் ஷோ, திரையிடப்பட்டது. இந்த புஷ்பா 2 படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இரவு 9.30 மணியளவில் தியேட்டருக்கு வந்த்ததால், அவர்களை காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரேவதி என்ற ரசிகையும் அவரது மகனும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை உடனடியாக துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அல்லு அர்ஜூன், தியேட்டர் மேனேஜ்மெண்ட் மற்றும் பாதுகாப்பு டீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டு தொகையை அல்லு அர்ஜுன் வழங்கினார். ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா ஐகோர்ட்டில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனை தெலுங்கானா போலீசார் இன்று கைது செய்தனர். சிக்கட்பள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அல்லு அர்ஜுன், பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் சிறைக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஐகோர்ட்டில் நீதிமன்றத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுன்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதன் மூலம் நம்பள்ளி கோர்ட்டு பிறப்பித்த 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் சில மணி நேரத்தில் சஞ்சல்குடா சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சட்ட நடவடிக்கை செயல்முறையில் தாமதம் ஏற்பட்டதால், நாளை காலை தான் சஞ்சல்குடா சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், தனது மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், சஞ்சல்குடா சிறையில் நீண்ட நேரம் காத்திருந்ததார் . சட்ட நடவடிக்கை செயல்முறையில் தாமதம் ஏற்பட்டதால், அல்லு அரவிந்த் இறுதியில் வளாகத்தை விட்டு வெளியேறினார் என்று கூறப்படுகிறது.
Read More: “சொந்த அண்ணனை சைட் அடிப்பியானு கேப்பாங்க..” சூர்யாவின் தங்கைக்கு நேர்ந்த சம்பவம்..