கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த உணவுகளை கட்டாயமாக சாப்பிடக்கூடாது.! என்னென்ன தெரியுமா.!?
பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாகவே இருக்கும். இதனாலேயே மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் பெண்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவு தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதன்படி கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன அவை என்னென்ன தெரியுமா?
முட்டை - முட்டையில் உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் இருந்து வந்தாலும் பச்சை முட்டை அல்லது பாதி வேக வைத்த முட்டையை கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. முழுதாக சமைக்காத முட்டையில் சால்மனெல்ல்லா என்ற கிருமி இருப்பதால் இது குழந்தையை பாதிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
பதப்படுத்தப்படாத பால் - கர்ப்ப காலங்களில் கால்சியம் சத்து மிகவும் அவசியம். பாலில் கால்சியம் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் பலரும் பால் குடித்து வருகின்றனர். ஆனால் பதப்படுத்தப்படாத பாலை குடிக்கும் போது வயிற்றுப்போக்கு, நோய் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.
முழுமையாக சமைக்கப்படாத கடல் உணவுகள் - ஒரு சில மீன் வகைகளில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருப்பதாலும், சமைக்கப்படாத கடல் மீனில் ஒட்டுண்ணிகள் இருப்பதாலும் இது கர்ப்பிணி பெண்ணுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகப் பெரும் ஆபத்து என்று கருதப்படுகிறது.
கிரீன் டீ, மிளகு கீரை, ஆளி விதை - இவை உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஊட்டச்சத்தையும் தரும் என்றாலும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை குறைவதற்கு இந்த உணவுப் பொருட்கள் முக்கிய காரணமாக இருப்பதால் கர்ப்ப காலத்தில் இவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் பச்சை காய்கறிகள், முளைகட்டிய பயிறு வகைகள், செயற்கையான இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள், தேன், பழைய மிஞ்சிய உணவுகள், குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகள், போன்றவற்றை கண்டிப்பாக தவிர்ப்பது தாய்க்கும் சேய்க்கும் நன்மையை ஏற்படுத்தும்.