மாரடைப்பு பயத்தை போக்கும் பச்சை வெங்காயம்..! சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து.!
உணவில் சுவை மற்றும் செரிமான மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது நிறைய மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. வெங்காயம் நிறைய விட்டமின் சி சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது. குளிர்காலத்தில் அடிக்கடி ஜலதோஷம், ஜுரம் மற்றும் வைரஸ் தாக்குதல்களால் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். இப்படிப்பட்ட நேரத்தில் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் அது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடல் நலத்தை காக்கின்றது.
மேலும் பச்சை வெங்காயம் சாப்பிடும் போது ரத்த சர்க்கரை அளவை அது கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் இனிப்பு தன்மை குறைவாக இருக்கிறது. சர்க்கரை நோயினால் உடல் பாதிப்பை சந்திப்பவர்கள் பச்சை வெங்காயத்தை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்தை மேம்படுத்தும். இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருப்பதை இது உறுதி செய்கிறது.
நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க இது உதவுவதால், ரத்த சர்க்கரையை, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் இதய பிரச்சினைகளை இது சீராக்குகிறது. பச்சை வெங்காயத்தில் விட்டமின் சி மட்டுமல்லாமல் விட்டமின் கே, விட்டமின் பி6, பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனிசு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது பெரிய பங்காற்றுகிறது. ப்ரீபயாடிக் ஃபைபர் பச்சை வெங்காயத்தில் இருக்கிறது எனவே இது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இந்த வகை பாக்டீரியாக்கள் நம் உடலில் செரிமான சக்தியை சீரமைத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.