மக்களே..!! மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது.
இடர்பாடுகளை கருத்தில் கொண்டு 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10.12.2024 வரை செலுத்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.