மக்களே உஷார்..!! இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..? வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!
தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (நவ.29) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ரெட் அலர்ட்
நாளை (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : மாதம் ரூ.40,000 சம்பளம்..!! அரசு துறையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!