முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி வரை... ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு மத்திய அரசு செம அறிவிப்பு...!

08:28 AM Nov 07, 2023 IST | 1newsnationuser2
Advertisement

நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் இயக்கம் 2.0 இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்களில் 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் 'வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்' ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (டி.எல்.சி) அதாவது ஜீவன் பிரமாணைப் பரவலாக ஊக்குவித்து வருகிறது. 2014-ம் ஆண்டில், பயோமெட்ரிக் கருவிகளைப் பயன்படுத்தி டி.எல்.சி.களை சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதார் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட முக அங்கீகாரத் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்குவதில் இத்துறை ஈடுபட்டது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான எந்தத் திறனறி செல்பேசியிலிருந்தும் எல்.சி.யை சமர்ப்பிக்க முடியும்.

இந்த வசதியின்படி, முக அங்கீகார நுட்பம் மூலம் ஒரு நபரின் அடையாளம் நிறுவப்பட்டு டி.எல்.சி உருவாக்கப்படுகிறது. நவம்பர் 2021-ல் தொடங்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், ஓய்வூதியதாரர்கள் வெளிப்புற பயோ-மெட்ரிக் சாதனங்களை சார்ந்திருப்பதைக் குறைத்ததுடன் பொதுமக்கள் மிகவும் அணுகக்கூடியதாகவும் மலிவானதாகவும் ஆக்கியது.டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க டி.எல்.சி / முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இத்துறை 2022 நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் 37 நகரங்களில் ஒரு இயக்கத்தைத் தொடங்கியது.

35 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான டி.எல்.சி.க்கள் வெளியிடப்பட்டு இந்த இயக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 17 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், அமைச்சகங்கள் / துறைகள், ஓய்வூதியர்கள் நலச் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களை இலக்காகக் கொண்டு 2023 நவம்பர் 30 வரை நாடு தழுவிய இயக்கம் 100 நகரங்களில் 500 இடங்களில் நடத்தப்படுகிறது.

Tags :
central govtepfolife certificatepension
Advertisement
Next Article