முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பழமையான இந்து கோவிலை இடித்த பாகிஸ்தான்!… வணிக வளாகம் அமைக்க திட்டம்!

05:29 AM Apr 14, 2024 IST | Kokila
Advertisement

Hindu temple: பாகிஸ்தானில் வணிக வளாகம் அமைக்க வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவில் என்று கூறப்படும் கைபர் கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் எல்லை நகரான லாண்டி கோட்டல் பஜாரில் கைபர் கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவில் ஆகும். அந்நாட்டில் அதிகப்படியான இந்து மக்களின் வழிப்பாடு தளமாக இருந்திருக்கிறது.

இருப்பினும், 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்து மதத்தினர் இந்தியாவிற்கு குடிப்பெயர்ந்தார்கள். அதன்பிறகு, இந்த கைபர் கோவிலுக்கு பொதுமக்களின் வருகை கணிசமாக குறைந்தது. அதன்பிறகு, கடந்த 1992ல் அயோதி ராமர் கோவிலின் கட்டுமானத்திற்காக பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது, சில மதபோதர்கள் ஏற்படுத்திய தாக்குதலால் இந்த இந்துக் கோவிலிலும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் இந்திய சுதந்திரதிற்கு பிறகு இந்தியா வந்ததால் இந்த கோவிலின் பயன்பாடு குறைந்தது. மேலும், இந்த கோவிலின் செங்கல்கள் தானாக விழுந்து சேதமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த கைபர் கோவில் முழுவதுமாக இடிக்கபட்டு தகர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கைபர் கோவில் இருந்த பகுதியில் பெரிய வணிக வளாகம் அமைக்கப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Readmore: உயிருக்கே ஆபத்து..!! தூங்கும்போது குறட்டை வருகிறதா..? இந்த நீரை மட்டும் ஆவி பிடித்தால் போதும்..!!

Advertisement
Next Article