வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா? இந்த எண்ணெய்யை 5 சொட்டு தேய்த்தால் போதும்..
வழுக்கை தலை இன்று உள்ள பல ஆண்களின் பிரச்சனையாக மாறி உள்ளது. இளம் வயதிலேயே பலருக்கு இன்று வழுக்கை தலை வந்து விடுகிறது. இதனால் பலர் தங்களின் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர். சரியான முடி பராமரிப்பு இல்லாதது, தூக்கமின்மை, மன அழுத்தம், செயற்கையாக தயார் செய்த பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் முடி உதிர்வு அதிகம் ஆகி, வழுக்கை வந்து விடுகிறது.
இதனால் பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் பலர், விலை அதிகமான எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இதனால் எந்த பயனும் இல்லை. நீங்கள் இத்தனை ஆயிரங்கள் செலவு செய்வதற்கு பதில், சுலபமாக கொட்டிய முடியை வளர வைத்து விடலாம். முடி உதிர்வை குறைத்து வழுக்கை தலையில் முடியை வளர செய்ய இங்கு சில வழிகளை காணலாம்.
பொதுவாக ரோஸ்மேரி எண்ணெய் முடி உதிர்வை குறைக்க மிகவும் பயன்படுகின்றது. இந்த ரோஸ்மேரி எண்ணெய்யை தேய்த்தால் உங்களுடைய உச்சந்தலையில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். ரத்த ஓட்டம் நன்கு இருப்பதால், புதிய முடிகள் வளரும். இந்த எண்ணெய்யில் வீரியம் சற்று அதிகம் என்பதால், இந்த எண்ணெய்யை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தான் பயன்படுத்த வேண்டும்.
இந்த எண்ணெய்யை இரவில் தலையில் தேய்த்து, குறைந்தது 10 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்களின் முடி கட்டாயம் வளர்ந்து விடும். இதனால் உங்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இதனால் இதை நீங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள், கட்டாயம் உங்களின் உதிர்ந்த முடி வளரும்.