For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் நுங்கு பால் சர்பத்…! இதை ட்ரை பண்ணுங்க….!

05:55 AM Apr 16, 2024 IST | Maha
கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் நுங்கு பால் சர்பத்…  இதை ட்ரை பண்ணுங்க…
Advertisement

சுட்டெரிக்கும் கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தவிர்த்து குளுமையாக வைத்துக்கொள்ள இந்த நுங்கு பால்சர்பத்தை ட்ரை பண்ணி பாருங்கள். குளிர்ச்சி நிறைந்த நுங்கில் சுவையான நுங்கு பால் தயார் செய்து குடித்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

Advertisement

தேவையான பொருட்கள்: நுங்கு, பால், சப்ஜாவிதை, பாதாம் பிசினி, சர்க்கரை, ஐஸ்கட்டி.

செய்முறை: ஒரு கப் காய்ச்சாத பாலில் ஒரு தேக்கரண்டி பாதாம் பிசின் அல்லது சப்ஜாவிதை சேர்த்து ப்ரிட்ஜில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பின்னர் தேவையான அளவு நுங்கை எடுத்து அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ப்ரிட்ஜில் உள்ள பாலை எடுத்து அதில் நறுக்கிய நுங்கு துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதில் உங்களின் தேவைக்கேற்ப ஐஸ்க்கட்டிகளை சேர்த்துக்கொண்டு குடித்து வருவதால் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.

Tags :
Advertisement