முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உலகின் மிக ஆபத்தான சிவப்புத் தேள் கடிக்கு புதிய சிகிச்சை...! மருந்தை கண்டுபிடித்த இந்தியா...!

09:52 AM Nov 02, 2023 IST | 1newsnationuser2
Advertisement

இந்திய சிவப்புத் தேள் கடிக்கு மேம்பட்ட புதிய சிகிச்சை உருவாக்கபட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் தேள் இனப்பெருக்கம் ஒரு கடுமையான பிரச்சினையாகும். இந்திய சிவப்புத் தேள் உலகின் மிகவும் ஆபத்தான தேள்களில் ஒன்றாகும். இந்திய சிவப்புத் தேள் விஷத்தால் தூண்டப்பட்ட நச்சுத்தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளைத் தடுப்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவும், குவஹாத்தியில் உள்ள தேஜ்பூர் பல்கலைக்கழக என்.ஐ.இ.எல்.ஐ.டி.யைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் குறைந்த அளவு வணிக ஏ.எஸ்.ஏ, ஏ.ஏ.ஏ மற்றும் வைட்டமின் சி கொண்ட புதிய சிகிச்சை மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

இந்த மருந்தின் செயல்திறன் முதலில் விலங்கு மாதிரிக்கு மாற்றாக நூற்புழு மாதிரியில் சோதிக்கப்பட்டது. இந்த ஆய்வு சமீபத்தில் டாக்ஸின்ஸ் இதழில் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய மருந்து உருவாக்கத்திற்குக் காப்புரிமையும் கோரப்பட்டுள்ளது.இந்தச் சிகிச்சை, தேள் கொட்டுவதற்கு எதிராக உலகெங்கிலும் கோடிக் கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும்.

Tags :
IIT kanpurRed scorpiontreatment
Advertisement
Next Article