முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெல்லை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு..!! யார் யாருக்கு எவ்வளவு..?

04:32 PM Dec 22, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக சிரமத்தை சந்தித்துள்ளனர். பெரும்பாலானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிவாரணம் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 10,000 ரூபாய், 33 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹேக்டருக்கு 17,000 ரூபாய், மானாவாரி பயிர் 8,000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும், பசு மற்றும் எருது உயிரிழப்புக்கு 37,500 ரூபாய், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு உயிரிழப்புக்கு ரூ.4,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த கட்டுமானத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
கனமழைதமிழ்நாடு அரசுதென் மாவட்டங்கள்நிவாரணத் தொகை
Advertisement
Next Article