For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எவ்வளவு நாள்பட்ட குடல் புண்ணாக இருந்தாலும் இதை சாப்பிட்டால் குணமாகிவிடும்..!! வீட்டிலேயே செய்யலாம்..!!

Ulcers can be easily cured with medicines made from herbs.
05:30 AM Dec 07, 2024 IST | Chella
எவ்வளவு நாள்பட்ட குடல் புண்ணாக இருந்தாலும் இதை சாப்பிட்டால் குணமாகிவிடும்     வீட்டிலேயே செய்யலாம்
Advertisement

தற்போதுள்ள இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. "இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது" என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Advertisement

நம் உடல் நிலையும், மன நிலையும் சீராக இருக்க வேண்டுமென்றால், உணவு மிக மிக அவசியம். இந்த உணவு நன்றாக செரித்து கழிவுபொருள் நீங்கி மீதமுள்ள சத்துப் பொருட்கள் தான் நம் ரத்தத்தில் கலந்து உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் சென்றடைகிறது. வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளாரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் உணவு செரித்தலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அல்சர் ஏற்படக் காரணங்கள் மற்றும் வராமல் தடுப்பது, வந்தால் மூலிகை மருத்துவத்தில் எப்படி சிகிச்சை பெறலாம் என்பது பற்றி மூலிகை மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அல்சர் எதனால் ஏற்படுகிறது..?

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும். அதாவது, வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம். இது நமது உணவு மண்டல உறுப்புகளின் மீது அமைந்திருக்கும் மியூக்கஸ் மெம்ப்ரேன் என்ற மென்மையான சவ்வை அழித்து விடுகிறது.

காரணங்கள்...

1. மன அழுத்தம் (எந்த வகையில் ஏற்பட்டாலும் சரி).

2. தவறான உணவு பழக்கவழக்கங்கள் (தாமதமாக சாப்பிடுதல், செயற்கை குளிர்பானம், துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு)

3. மதுவகைகள், புகைப்பிடித்தல், வெற்றிலைபாக்கு, புகையிலை

4. ஆங்கில மருந்துகளை அடிக்கடி சாப்பிடுவது

5. ஐஸ்கிரீம், சாக்லேட், அதிகமாக பால் மற்றும் தயிர், மோர் சாப்பிடுவது.

6. புளிப்பு தன்மையுள்ள பழங்களை அதிகளவில் சாப்பிடுவது (திராட்சை, கமலா, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலும்பிச்சை, பப்பாளி, ஊறுகாய், அன்னாசி)

இவைகளை தவிர்த்தாலே போதும் அல்சர் நம்மை நெருங்காது. உடம்பில் ரத்தத்தில் ஹைட்ரஜன் அயணிகளின் அளவு 7க்கும் கீழே குறைந்தால் உடம்பு புளிப்பு தன்மையடையும். அதிகப்படியான புளிப்பு மலம், சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இரைப்பையிலும் நிறைய சேர்ந்து விடும். புளிப்புத்தன்மை இரைப்பையில் அதிகமானால் அதன் உட்சுவரில் அரிப்பு ஏற்பட்டு புண் உண்டாகி விடும். நாளாக நாளாக வயிறு எரிச்சல், குடல் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மூலிகை சிகிச்சை...

மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை வைத்தே அல்சரை எளிதில் குணப்படுத்தலாம். ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அல்சரை குணப்படுத்த வேப்பிலை, குப்பை மேனி, வெந்தியம், அருகம்புல், கடுக்காய், அத்தியிலைநெல்லி, கற்றாழை, கோஸ், மிளகு, சுக்கு, புதினா, கொத்தமல்லி, நன்னாரி, மணத்தக்காளி, சுண்டைக்காய், பெருங்காயம், மஞ்சள், வசம்பு, சீரகம், வாழைத் தண்டு, மாதுளை, அகத்திக்கீரை முதலியவைகள் பயன்படுகின்றன.

இவைகளை சேகரித்து கேப்சூலாகவோ, பவுடராகவோ தயாரித்து சாப்பிடலாம். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன் அளவு இந்த பவுடரை தண்ணீரில் கலந்து இரண்டு முறை சாப்பிட்டாலே போதும். எவ்வளவு நாள்பட்ட குடல் புண்ணாக இருந்தாலும் 4 மாதங்களில் சரியாகிவிடும். இதற்கென உள்ள முறைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். எந்த மருத்துவ முறையை பின்பற்றுகிறோமோ அதே முறைகள் உள்ள மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று சிகிச்சையை தொடர்ந்தால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகி விடும்.

Read More : மாதம் ரூ.96,000 சம்பளம்..!! கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது..?

Tags :
Advertisement