For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாவங்கள் போக்கி நிம்மதியை தரும் திருக்கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?

09:35 AM Feb 02, 2024 IST | 1newsnationuser5
பாவங்கள் போக்கி நிம்மதியை தரும் திருக்கோயில்   எங்கு உள்ளது தெரியுமா
Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் என்ற பகுதியில் பாலப்ப நாயக்கன் பட்டியில் அமைந்துள்ளது நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில். கொங்கு நாட்டில் உள்ள வைணவ தலங்களில் புகழ்பெற்று விளங்கும் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். மலையின் உச்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் இந்த பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.

Advertisement

இக்கோயில் 120 அடி உயரம் கொண்டு மலையின் உச்சியில் உள்ள ஒரே பாறையில் கட்டப்பட்டதாகும். மேலும் 108 தீர்த்தங்களையும் மலையில் தாங்கி நின்ற இக்கோயிலில் தற்போது கடும் பஞ்சம் காரணமாக பெரிய பாழி, அமையா தீர்த்தம், அரிவாள் பாழி போன்ற மூன்று தீர்த்தங்கள் மட்டுமே இருந்து வருகின்றன. ஆனி மற்றும் ஆடி மாதங்களில் மட்டுமே இக்கோயிலில் சூரிய ஒளி பெருமாளின் மீது விழுவதால் அன்றைய தினங்களை விசேஷ நாட்களாக கருதி அபிஷேகங்கள் செய்து வருகின்றனர்.

இந்த மலையில் அமர்ந்து நைன மகரிஷி தவம் இருந்து பெருமாளை வேண்டி வந்ததால் இக்கோவிலுக்கு நைனாமலை வரதராஜ பெருமாள் எனும் பெயர் வந்தது. மேலும் திருப்பதிக்கு சென்றால் பக்தர்களுக்கு என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இந்த கோயிலிலும் கிடைக்கும் என்பது மற்றொரு சிறப்பு அம்சமாக கருதப்பட்டு வருகிறது.

குறிப்பாக பெருமாளுக்கு உகந்த சனி மற்றும் புதன்கிழமைகளில் இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டால் சர்வ பாவங்களையும் நீக்கி நற்கதியையும், நல்ல வாழ்வையும், நிம்மதியையும் தருவார் என்பது இக்கோயிலின் மிகப்பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்தக் கோயிலில் வந்து வேண்டுதல் செய்யும் பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகமும், கடவுளுக்கு வஸ்திரமும் அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement