முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Parenting tips : உங்கள் குழந்தைகள் அதிகமாக அடம்பிடிக்கிறார்களா.! இதை செய்து பாருங்கள்.!?

05:57 AM Feb 18, 2024 IST | 1newsnationuser5
Advertisement

Parenting tips: பொதுவாக பெற்றோர்கள் செய்யும் செயலை வைத்து தான் குழந்தைகளின் நடவடிக்கை இருக்கும். எனவே குழந்தைகளின் முன்பு சண்டையிடுவதோ, வாக்குவாதம் செய்வதோ, பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதோ இந்த மாதிரி செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது. இது குழந்தைகளின் மனதை பெரிதும் பாதித்து எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தற்போதுள்ள குழந்தைகள் அதிகமாக அடம் பிடிக்கிறார்கள், பெற்றோர்கள் சொல்வதை கேட்பதே இல்லை என பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். இதற்கு என்ன காரணம் என்றும், இதை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை குறித்தும் இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்?

Advertisement

குழந்தைகள் பெற்றோர்கள் சொல் பேச்சு கேட்காமல் அடம் பிடிப்பதற்கு பல வகையான காரணங்கள் இருந்து வருகின்றன. குழந்தைகளிடம் எப்படி நடந்து கொண்டால் அடம்பிடிக்காமல் சொல்பேச்சு கேட்பார்கள் என்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அடப்பிடிக்கும் காரணங்களை தவிர்த்தால் கட்டாயம் நம் சொல் பேச்சு கேட்கும் அறிவுள்ள குழந்தைகளாக வளர்வார்கள்.

  1. நாம் பேசுவதை சொல்ல முயற்சிப்பதை குழந்தைகள் கவனிக்கும் விதத்திலும், ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்திலும் சொல்ல முயற்சிக்க வேண்டும்.
  2. வீட்டில் எதை செய்ய வேண்டும், செய்ய கூடாது என விதிமுறைகளை வகுத்து அதை நாம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் குழந்தைகளும் கற்று கொள்வார்கள்.
  3. குழந்தைகளின் உணர்வுகளான கோவம், அழுகை, எரிச்சல் போன்றவற்றை வெளிபடுத்த விட வேண்டும். அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்த விடாமல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும் என கட்டளையிடும் போது குழந்தைகள் அடம்பிடிக்க தொடங்குகிறார்கள்.
  4. குழந்தைகள் முன்பு சாதாரணமாக பேசும்போதோ அல்லது கோவத்திலோ யாரையும் மரியாதைக்குரியுடன் பேசக்கூடாது. நாம் மரியாதையுடன் ஒருவரிடம் நடந்து கொள்ளும் போது குழந்தைகளும் நம்மை பார்த்து மரியாதையை கற்றுக் கொள்வார்கள்.
  5. குழந்தைகள் ஏதாவது தவறு செய்யும்போது உடனே அடிக்கவோ, திட்டவோ கூடாது. இவ்வாறு செய்யும்போது குழந்தைகள் செய்யும் தவறுகளை நம்மிடம் இருந்து மறைக்க மற்றும் பொய் பேச கற்றுக் கொள்கிறார்கள்.
  6. இதற்கு மாறாக குழந்தைகள் நம்மிடம் உண்மையை சொல்லும்போது பாராட்டுவது மற்றும் தவறுகள் செய்து விட்டால் அதை எப்படி சரி செய்வது என்று குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.
  7. குழந்தைகள் சிறு வயதில் இருந்தே அவர்களின் தேவைகளை அவர்களே செய்து கொள்ளும்படி வழி நடத்த வேண்டும். ஏதாவது ஒரு பொருள் வாங்கி தர சொல்லி அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு சிறிது சிறிதாக பணம் கொடுத்து சேர்த்து வைக்க சொல்லி தூண்டினால் அவர்களின் தேவையும் நிறைவேறும். அடம்பிடிக்கும் குணமும் இல்லாமல் போகும்.
Tags :
ChildrensLifestyleparenting tips
Advertisement
Next Article