முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீபாவளிக்கு களைகட்டும் புதிய ரக பீர்கள்..!! டாஸ்மாக் கடைகளில் குவியும் மதுப்பிரியர்கள்..!!

07:00 AM Nov 11, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பல நூறு கோடிகள் வருமானம் வருகின்றன. தீபாவளியை பொறுத்தவரை 2021ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அடுத்த ஆண்டு 11 சதவீதம் அதிகரித்து ரூ.464 கோடியாக உயர்ந்தது.

Advertisement

மேலும், இதனை இலக்காக வைத்து ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் முக்கிய பண்டிகை தினங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்நிலையில், தற்போது டாஸ்மாக்கிற்கு புதிதாக 2 பீர் மதுபானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காட்பாதர், தண்டர்போல்ட் ஸ்டிராங்க் என்ற பெயரில் இரண்டு பீர் பாட்டில்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை ரூ.160 ஆகும்.

இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்குள் 5 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு மது பானங்களின் விற்பனை ரூ.500 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் பீர் ரகங்களுக்கு கடும் கிராக்கியும், தட்டுப்பாடும் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து பீர் வாங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :
500 கோடி இலக்குடாஸ்மாக் கடைகள்தமிழ்நாடு அரசுபுதிய ரக பீர்கள்
Advertisement
Next Article