முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"இனி 38 இல்ல 45.."! தமிழகத்தில் வர இருக்கும் 7 புதிய மாவட்டங்கள்.! விரைவில் அறிவிப்பை வெளியிடும் முதல்வர்.?

11:31 AM Jan 12, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலமாக உருவாக்கப்பட்ட போது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு நிர்வாக சீரமைப்பிற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

Advertisement

கடந்த அதிமுக ஆட்சியில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. தென்காசி கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகியவை புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக 7 மாவட்டங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாவட்டங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவிலேயே இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement
Next Article