fbpx

காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங்..!! – உச்ச நீதிமன்றம் ஆணை

நீட் கவுன்சிலிங் முடிந்தபிறகு மருத்துவ சீட்கள் காலியாக இருந்தால் சிறப்பு ‘நீட்’ கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. .

கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி லக்னோ மருத்துவக் கல்லூரி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.எஸ். விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.  நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய நீதிபதிகள், கடைசி சுற்று கவுன்சிலிங் முடிந்தபிறகு காலி இடங்கள் இருந்தால் சிறப்பு கவுன்சிலிங் நடத்தலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். NRI இடங்கள் காலியாக இருந்தால் அவற்றைக் கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், எந்தக் கல்லூரியும் நேரடியாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், மாநில சேர்க்கை அதிகாரிகள் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு சேர்க்கை செயல்முறை ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட சேர்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும், காத்திருப்புப் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்றும் அது மேலும் தெளிவுபடுத்தியது.

Read more ; புஷ்பா 2 பார்க்க வராத காதலன்.. மூன்றாவது மாடியில் இருந்து குதித்த காதலி..!! அல்லு அர்ஜுன் படத்துக்கு வந்த புது சிக்கல்..

English Summary

NEET UG 2024 special stray vacancy counselling schedule out: Begins today, following SC directive to avoi

Next Post

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால் மரணத்தின் விளிம்புக்கு சென்ற பெண்.. மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்...

Mon Dec 23 , 2024
The shocking incident of a woman dying after drinking too much water has left her in a state of shock.

You May Like