மும்பை: ராஜ் தாக்கரேவுக்கு பரிசளிக்கப்பட்ட பாபர் மசூதி செங்கல்..!! நவ நிர்மான் சேனா தொண்டர் பெருமிதம்.!
உத்தரப்பிரதேச மாநில அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதிலிருந்து எடுக்கப்பட்ட செங்கல் நவ நிர்மான் கட்சியின் நிறுவனர் ராஜ் தாக்கரேவுக்கு பரிசு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நவ நிர்மான் கட்சியைச் சேர்ந்த பாலா நந்கனோகர் என்ற நபர் பாபர் மசூதியின் செங்கல் ஒன்றை தங்களது கட்சியின் நிறுவனரும் சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரேவின் மகனுமான ராஜ் தாக்கரேவுக்கு பரிசு வழங்கியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற விழாவில் இந்த பரிசை ராஜ் தாக்கரேவுக்கு வழங்கி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய பாலா நந்கனோகர் 1992 ஆம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதிலிருந்து செங்கல் ஒன்றை எடுத்து பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்தச் செங்கலை சிவ சேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே உக்கு பரிசளிக்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். துரதிஷ்டவசமாக அவர் இப்போது உயிரோடு இல்லாததால் அவரது மகன் ராஜ்தாக்கடைவுக்கு இதை பரிசளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.