For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மாமிசம்.. முஸ்லிம்கள் சாப்பிட அனுமதி."!சிங்கப்பூர் முஃப்தி அறிவிப்பு.!

11:32 AM Feb 04, 2024 IST | 1newsnationuser4
 ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மாமிசம்   முஸ்லிம்கள் சாப்பிட அனுமதி   சிங்கப்பூர் முஃப்தி அறிவிப்பு
Advertisement

சிங்கப்பூரில் வாழும் முஸ்லிம்கள், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தலைமை முஃப்தி டாக்டர் நசீருத்தீன் முகமது நாசிர் ஃபத்வா அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சியிலும் விலங்குகளின் செல்கள் பயன்படுத்தப்படுவதால் அது ஹலாலான இறைச்சி தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சிங்கப்பூர் நாட்டில் சமகால சமூகங்களில் ஃபத்வா பற்றிய இரண்டு நாள் சர்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய டாக்டர் நசீருத்தீன் முகமது நாசிர் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் மாமிசங்கள் ஹலால் முறையில் தான் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை முஸ்லிம்கள் உணவாக உட்கொள்ளலாம் என அறிவிப்பை கொடுத்தார். மேலும் இது தொடர்பாக ஆய்வகங்களில் சென்று நேரடி ஆராய்ச்சி செய்த பின் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்றத்துடன் ஆராய்ச்சி இருக்க வேண்டும் என்பதற்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மாமிசம் தொடர்பான ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது என சிங்கப்பூர் முஸ்லிம்களின் தலைமை முஃப்தி முகமது நசீர் தெரிவித்துள்ளார். நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த ஹலால் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த முடிவு குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் இறைச்சி தொடர்பான ஆய்வுகளை சிங்கப்பூர் இஸ்லாமிய மத கவுன்சில் இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து அதிலிருந்து பெறப்பட்ட தெளிவான முடிவுகளின் அடிப்படையில் இந்த ஹலால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

Tags :
Advertisement