முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கண்ணை மறைத்த மோகம்.! உல்லாசத்திற்கு இடையூறு.! பிஞ்சு குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரத் தாய்.!

04:28 PM Feb 10, 2024 IST | 1newsnationuser4
Advertisement

கர்நாடக மாநிலத்தில் தனது 5 வயது மாற்றுத்திறனாளி மகளை கள்ளத்தொடர்பிற்கு இடையூறாக இருப்பதாக கருதி, தாய் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அந்த கொடூர தாயின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த தாயையும் அவருடன் கள்ள தொடர்பில் இருந்த இளைஞரையும் கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement

கர்நாடகா மாநிலம் தார்வார் டவுன் கமலாபுரா கூகார் பகுதியில் ஜோதி ஹிரேமத் (26) தனது கணவர் கல்லையா மற்றும் தனது இரட்டை பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ராகுல் என்ற இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் ஜோதி. இதனை அறிந்த கல்லையா அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் ஜோதி ராகுலுடனான உறவை முறிக்கவில்லை. இதனால் ஜோதிக்கும் கல்லையாவிற்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி குழந்தையான 5 வயதுடைய சஹானா, தனக்கும் ராகுலுக்கும் இடையிலான கள்ளத்தொடர்புக்கு இடைஞ்சலாகவும், சுமையாகவும் இருக்க கூடும் என்று ஜோதி கருதினார். இதனால் அந்த குழந்தையை அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ராகுலும், ஜோதியும் படுக்கை அறையில், உல்லாசமாக இருந்த வேளையில் சஹானா விடாது அழுதிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, அந்தக் குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்திருக்கிறார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஜோதியையும் ராகுலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Tags :
DaughterIllicit RelationshipKarnatakamothermurderpolice arrest
Advertisement
Next Article