முகத்தை மூடி தூங்குபவரா நீங்கள்?? உயிரே போகும் அபாயம்!!! உடனே நிறுத்திவிடுங்கள்..
குளிர்காலம் வந்துவிட்டால், உடனே போர்வையால் தலை முழுவதும் மூடி தூங்குவது தான் பலருக்கு வழக்கம். இப்படி தூங்கினால் தான் தூக்கமே வரும் என்று கூறுபவர்கள் அநேகர். ஆனால் இப்படி தூங்குவதால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். ஆம், முகத்தை போர்வையால் மூடும் போது, வெளியே இருந்து காற்று உள்ளே வராது. மேலும், ஒரே காற்றை நாம் தொடர்ந்து சுவாசிப்பதன் மூலம், தொண்டையில் ஈரப்பதம் குறைந்து, தொண்டை வறண்டு விடும். மேலும், இதனால் சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு, சரும பொலிவு குறைது விடும். இதனால் முகப் பருக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், இவ்வாறு தூங்குவதால் நுரையீரலுக்கு போதுமான அளவு காற்று இல்லாமல், நுரையீரல் சுருக்கம் அடையும். இதனால் ஆஸ்துமா உள்ளவர்கள் கட்டாயம் இப்படி தூங்க கூடாது. இப்படி முகத்தை மூடி தூங்குவதால், ஆக்சிஜன் குறைந்து தலைவலி, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது மட்டும் இல்லாமல், மூச்சு திணறல் ஏற்படவும், மாரடைப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் முகத்தை மூடி தூங்குவதை இன்றே விட்டுவிடுங்கள்..
Read more: அடிக்கடி வாய்ப்புண் வர இது தான் காரணம்; கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..