”இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயங்காது”..!! ”பார்க்கிங்கில் யாரும் வாகனங்களை நிறுத்த வேண்டாம்”..!! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!!
சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தாமதமின்றி இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1860 425 1515 என்ற எண்ணையும், மகளிர் 155370 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
இந்நிலையில், மெயின் சாலையில் இருந்து பரங்கிமலை மெட்ரோ வரை செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்பேடு ரோகிணி திரையரங்கு அருகே நடை மேம்பாலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடபழனி, சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையத்தில் மின் படிக்கட்டு இயங்கவில்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் தண்ணீர் தேங்கியுள்ளதால், யாரும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
Read More : “சென்னையில் மழைநீர் குறைந்தால் மட்டுமே மின் விநியோகம்”..!! மின்வாரியம் அறிவிப்பு..!!