முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஹனிமூன் ட்ரிப்பில், மகளை அழைத்து சென்ற நடிகர்...

marias-daughter-accompanied-with-her-moms-honeymoon-trip
07:16 PM Nov 30, 2024 IST | Saranya
Advertisement

சின்னத்திரை, சினிமா என அடுத்தடுத்து செயல்பட்டு வரும் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாசின் மூத்த மகன் தான் ஷாரிக். பென்சில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஷாரிக் ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலாமானர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஷாரிக்கின் திருமணம் தான் ஹாட் டாபிக்காக இருந்தது. ஆம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தன்னை விட 3 வயது மூத்தவரான மரியா ஜெனிஃபர் என்பவரை ஷாரிக் காதல் திருமணம் செய்துக் கொண்டார். இது ஷாரிக்கிற்கு முதல் திருமணம் என்றாலும், இவரது மனைவி மரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி, 9 வயதான மகள் உள்ளார்.

Advertisement

தான் போகும் ஜிம்மில் செயல்பட்டுவந்த மரியா மீது ஜெனிஃபர் மீது ஷாரிக்கிற்கு காதல் வந்துள்ளது. இதனால் ஷாரிக் மரியாவிடம் சென்று பேசியுள்ளார். ஆனால் மரியா, அவரை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். இதுவே அவர்மீது ஷாரிக்கிற்கு காதல் ஏற்பட காரணம். ஒருகட்டத்தில், ஷாரிக் தனது காதலை, மரியாவிடம் கூறியுள்ளார். தனக்கு ஏற்கனவே குழந்தை இருப்பதால் மரியா முதலில் தயங்கி உள்ளார். ஆனால், தனது வீட்டிற்கு வந்து போகும் ஷாரிக், தனது மகளிடம் அன்பு காட்டியதும் மரியாவும் ஷாரிக்கின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்தை குறித்து, தனது அப்பா, அம்மாவிற்கு கூட கூறாமல், அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தான் ஷாரிக் கூறியுள்ளார்.

ஆனால் அவரது பெற்றோரும் இந்த திருமணதிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இவர்களின் திருமணம், தடபுடலாக நடைபெற்றது. இந்நிலையில், தற்போது ஷாரிக் மற்றும் மரியா தேனிலவிற்க்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களுடன், மரியாவின் மகளும் சென்றுள்ளார். இதனிடையே, தனது மகளுக்கு ஷாரிக் சிறந்த அப்பாவாக செயல்படுவதாக மரியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Read more: “நா இல்லாம உங்களால சாதிக்க முடியாது”; சவால் விட்ட செந்தில்; கவுண்டமணி கொடுத்த பதிலடி..

Tags :
DaughterHoneyMOONshariqumariyas
Advertisement
Next Article