For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாலத்தீவு: சீன ஆதரவு, அதிபர் முய்ஸூவுக்கு எதிராக குற்றச்சாட்டுத் தீர்மானம் தாக்கல்..?எதிர்க்கட்சிகள் முடிவால் திடீர் பரபரப்பு.!

03:36 PM Jan 29, 2024 IST | 1newsnationuser7
மாலத்தீவு  சீன ஆதரவு  அதிபர் முய்ஸூவுக்கு எதிராக குற்றச்சாட்டுத் தீர்மானம் தாக்கல்   எதிர்க்கட்சிகள் முடிவால் திடீர் பரபரப்பு
Advertisement

மாலத்தீவு நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள மாலத்தீவு ஜனநாயக கட்சி அந்த நாட்டின் அதிபர் முகமது முய்ஸுவை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அங்கிருந்து வரும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சீனாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதியான முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக நான்கு அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே முதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் ஜனாதிபதியின் அமைச்சரவையில் புதியதாக நான்கு அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான அங்கீகாரத்தை நிறுத்த பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கி அரசுக்கு ஆதரவாணையம் விக்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கண்டித்தீமு எம்பி அப்துல்லா ஷஹீம் அப்துல் ஹக்கீம் ஷஹீம் மற்றும் கெந்திகுல்ஹூதூ எம்பி அஹமட் ஈசா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய கைகலப்பாக மாறியது. இந்த தாக்குதலில் அப்துல் ஹக்கீம் ஷஹீம் ஈஷாவை பிடித்து கீழே தள்ளினார். இந்த தாக்குதலின் போது இருவரும் கீழே விழுந்ததில் ஷஹீமின் தலையிலும் காயம் ஏற்பட்டது. சிறுபான்மை கட்சியின் தலைவர் மூசா சிராஜ் இவர்களிடையே நடைபெற்ற மோதலை நிறுத்த முயன்றார்.

பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவு ஜனநாயக கட்சி அதிபர் முய்ஸுவின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஆளும் கட்சியான மாலத்தீவு முற்போக்கு கட்சி மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியா ஆகியவை இணைந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கின . இதனால் பாராளுமன்றத்தின் அமைதி பாதிக்கப்பட்டதோடு சபாநாயகரின் சேம்பருக்கும் சென்று போராட்டம் நடத்தினர்.

சபாநாயகரின் இருக்கைக்கு அருகே பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி மோதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த தாக்குதலில் மதிவேரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் சரீரின் விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கிடையிலான கைகலப்பின் போது சரீர் காயமடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட மாலத்தீவு ஜனநாயக கட்சி, அட்டர்னி ஜெனரல் அகமது உஷாம், வீட்டு வசதி, நிலம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் டாக்டர். அலி ஹைதர், இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர். மொஹமட் ஷஹீம் அலி சயீத், பொருளாதார மேம்பாடு மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது சயீத் ஆகியோரின் நியமனத்திற்கு வாக்களிக்க கூடாது என முடிவு செய்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள மாலத்தீவின் ஆளும் கட்சியான மாலத்தீவின் ஆளும் முற்போக்குக் கட்சி (பிபிஎம்) மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) கூட்டணி, ஜனாதிபதி முய்ஸுவின் அமைச்சரவைக்கு ஒப்புதல் மறுப்பது குடிமக்களுக்கு அரசாங்கம் வழங்கும் சேவைகளை தடுப்பதற்கு சமம் என தெரிவித்து இருக்கிறது.

இதனிடையே ஆளும் பிபிஎம்-பிஎன்சி கூட்டணி நாடாளுமன்ற சபாநாயகர் முகமது அஸ்லாம் மற்றும் துணை சபாநாயகர் அகமது சலீம் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளதாக Sun.mv செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் அஸ்லம் ஒரு குறிப்பிட்ட கட்சியின் நலன்களை பூர்த்தி செய்வதற்காக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக ஆளும் கூட்டணி குற்றம் சாட்டியிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி மாலத்தீவின் அதிபராக பதவி பிரமாணம் செய்து கொண்ட முய்சு தன்னை சீனாவின் சார்பு தலைவராக பிரகடனப்படுத்தி வருகிறார். மேலும் இவர் பதவியேற்றதை தொடர்ந்து மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைத்திருந்தார். எனது நாட்டு மக்கள் இந்தியாவிடம் இந்த வேண்டுகோளை வைக்கும்படி தனக்கு வலுவான கட்டளையிட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Tags :
Advertisement