For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராமர் கோவில் திறப்பு: ஸ்ரீ ராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 'மோடி'.! முன்னாள் அமைச்சர் அத்வானி புகழாரம்.!

03:19 PM Jan 13, 2024 IST | 1newsnationuser7
ராமர் கோவில் திறப்பு  ஸ்ரீ ராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்  மோடி    முன்னாள் அமைச்சர் அத்வானி புகழாரம்
Advertisement

ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் ராம் லாலா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தியில் வருகின்ற  ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை பிரதமர் மோடி தலைமை ஏற்று நடத்த இருக்கிறார் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் சாமியார்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Advertisement

  இந்நிலையில் ராமர் கோயில் பற்றியும் அதற்கான நிகழ்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் எல்.கே அத்வானி. இது தொடர்பாக 76 வருட பழமையான இந்தி பத்திரிக்கையில் 'ராம் மந்திர் நிர்மான், ஏக் திவ்ய ஸ்வப்னா கி பூர்தி' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறார் அத்வானி. அந்தக் கட்டுரையில் 33 வருடங்களுக்கு முன்பு தான் மேற்கொண்ட ராமர் கோவில் ரத யாத்திரை பற்றியும் அதோடு தொடர்புடைய நிகழ்வுகளையும் விவரித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சோமநாதர் கோவிலில் இருந்து செப்டம்பர் 25 1990 இல் எல்.கே அத்வானி ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரையின் போது பிரதமர் மோடி தன்னுடன் பயணம் செய்ததாக தெரிவித்திருக்கிறார் அத்வானி. மேலும் தன்னுடைய ரத யாத்திரையின் போது ராமர் கோவில் கட்டப்படுவது போன்று தான் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அது தற்போது பிரதமர் மோடியின் முயற்சியால் நனவாகி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் பிரதமர் மோடியின் ஸ்ரீராமர் மீதான பக்தியையும் அவரது ஈடுபாட்டையும் விவரித்து கூறியிருக்கிறார்.

ஸ்ரீ ராமர் தனது கோவிலை கட்டுவதற்கு நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்து இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி தான் ராமர் கோவிலை கட்டி முடிக்க வேண்டும் என்பது ராம பிராணின் நாட்டமாகவும் இருந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கட்டப்பட்டதால் பல கோடி கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார் அத்வானி. வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் கோவில் கும்பாபிஷேக விழாவில் உன்னால் மத்திய அமைச்சரான அத்வானி கலந்து கொள்ள இருப்பதாக விஹெச்பி அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Tags :
Advertisement