முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கடவுள் சிலை இல்லாமல் வழிபாடு நடக்கும் திருக்கோயில்.? இந்த அதிசய கோயில் எங்கு உள்ளது.?

06:09 PM Feb 04, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக இந்து மத தர்மத்தின் படி கோயில்கள் என்றாலே சிலை வைத்து வழிபாடு செய்வது தான். ஆனால் சிலை இல்லாமலேயே வழிபாடு நடக்கும் ஓர் அதிசய திருக்கோயில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. கேரளாவில் மஞ்ஜப்புரா என்ற பகுதியில் உள்ள அம்பாடாத்து மாளிகா ஐயப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது.

Advertisement

இக்கோயிலில் ஐயப்பனின் சிலை இல்லாமலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் ஐயப்பனின் சிலைக்கு பதிலாக வெள்ளி முத்திரையிலான தடி, திருநீற்றுப்பை, கல் போன்றவற்றை ஐயப்பனாக நினைத்து அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்து வருகின்றனர். கேரளாவில் இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் மகரிஷி முனிவர் ஒருவர் ஐயப்பனை நினைத்து மேலே குறிப்பிட்ட பொருட்களை வைத்து தவம் இருந்துள்ளார். முனிவருக்கு காட்சியளித்த ஐயப்பன் இப்பகுதியில் தடி, திருநீற்று பை, கல் போன்றவற்றை வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்று கூறியதன் காரணமாகவே இக்கோயிலில் சிலையில்லாமல் வழிபாடு நடக்கிறது என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஐய்யப்பன் திருக்கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி தோசத்தால் ஏற்படும் துன்பங்கள் விலகும். கணவன், மனைவி ஒற்றுமை பெருகி அனைத்து விதமான செல்வங்களும் கிடைப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

மேலும், சபரி மலை ஐயப்பன் கோயிலில் நடைபெறுவது போலவே ஒவ்வொரு மாதத்திலும் முதல் 5 நாட்களும் கார்த்திகை மாதத்தில் முதல் நாளிலிருந்து 41 நாட்கள் வரை ஐயப்பனிற்கு மண்டல பூஜை நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோயிலை போலவே வழிபாடு நடைபெற்றாலும் இக்கோயிலில் பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
godIyyappantemple
Advertisement
Next Article