முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்ட போகுது" குபேரருக்கு பிடித்த ராசிக்காரர்கள் இவர்கள்தானா.?!

04:30 PM Jan 15, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக செல்வத்திற்கு எல்லாம் அதிபதி, செல்வங்களை பாதுகாப்பவர் குபேரர் தான். குபேர பகவானின் அருள் கிடைக்க வேண்டும் என்று பலரும் இவரை வேண்டி வருகின்றனர். அவ்வாறு குபேர பகவானின் அருள் கிடைத்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு பணமழை கொட்டும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

Advertisement

ஜோதிடத்தை பொறுத்தவரை 12 ராசிக்காரர்களுக்கும் சூரியன், சந்திரன், குபேரன், சனிபகவான் போன்றவர்களில் ஒருவர் அதிபதியாக இருந்து வருகின்றனர். இவ்வாறு அதிபதியாக இருப்பவர் அந்த ராசிக்காரர்களுக்கு எப்போதுமே துணை நின்று வருவார்கள். இப்போது குபேர பகவான் அதிபதியாக நிற்கும் ராசிகளும், குபேர பகவானுக்கு பிடித்தமான ராசிகளை குறித்தும் பார்க்கலாம்.

கடகம்
புத்தி கூர்மை அதிகம் கொண்ட கடக ராசி காரர்களுக்கு குபேர பகவான் எப்போதும் அருள் புரிந்து வருவார். எப்போதும் பணம் மற்றும் பொருட்களை சேர்ப்பதில் குறிக்கோளாக இருக்கும் கடக ராசிகாரர்களுக்கு, குபேர பகவான் அருள் புரிந்து பணத்திற்கு குறையில்லாமல் வைத்துக் கொள்வார்.
துலாம்
குபேர பகவானுக்கு பிடித்தமான துலாம் ராசியினருக்கு எப்போதுமே பண பற்றாக்குறை ஏற்படாது. எடுத்த காரியங்களில் கண்டிப்பாக வெற்றி பெற்று லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
புத்தி கூர்மை அதிகம் உள்ள விருச்சிக ராசியினர் எந்த வேலையை கொடுத்தாலும் சரியாக செய்து முடிப்பார்கள். அதிர்ஷ்டம் எப்போதுமே விருச்சிக ராசியினருக்கு இருக்கும். குபேரர் அருள் இந்த ராசியினருக்கு அதிகமாக இருப்பதால் பொருளாதாரத்தில் செழித்து இருப்பார்கள்.
மகரம்
பிறப்பிலேயே பணக்காரர்களாக பிறக்கும் யோகம் மகர ராசியினருக்கு உண்டு. கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் அதிகம் பெற்ற மகர ராசிக்காரர்களுக்கு குபேரர் மற்றும் லட்சுமியின் அருள் அதிகம் இருப்பதால் பணச் செல்வம், பொருட்செல்வம் பெற்று குறையில்லாமல் வாழ்வார்கள்.

Tags :
Lifestylemoneyzodiac
Advertisement
Next Article