உங்கள் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்பு, கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முக்கிய பங்கு வகிப்பது மருந்துகள் தான். குழந்தைக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் நாம் தேடுவது மருந்துகளை தான். அதற்க்கு பிறகு தான் நாம் மருத்துவரிடமே செல்வது உண்டு. இப்படி நாம் நினைத்த நேரம் நினைத்த நினைத்த மருந்துகளை கொடுப்பது இயல்பாக மாறி விட்டது. ஆனால் மருத்துவம் பற்றியும், மருந்துகள் பற்றியும் அடிப்படை புரிதல் இல்லாமல் நாம் மருந்துகளை கொடுக்கும் போது, பல பாதிப்புகளையும், பின்விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதனால் எப்போதும் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன்பு, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஆனால் ஒரு சில பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுக்கும் போது, ஒரு சில பொதுவான தவறுகளை செய்கின்றனர். இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் எதிர்மறையாகப் பாதிக்கப்படும்.
அந்த வகையில், குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுக்கும் போது பெற்றோர்கள் செய்யும் தவறுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. முதலில், மருந்தை உபயோகிப்பதற்கு முன்பு எப்போதும் மருந்தின் லேபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களை படிக்க வேண்டும். முக்கியமாக, மருந்தின் காலாவதி தேதியை பார்த்த பிறகு தான் மருந்தை கொடுக்க வேண்டும். மேலும், அம்மருந்து உங்கள் குழந்தையின் வயதிற்கும் உரியதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மருந்துகளை ஒரு போதும் வேறு அட்டைகளில் வைக்க கூடாது. மருந்துகளை அவ்வப்போது பரிசோதித்து காலாவதியான மருந்துகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மருந்துகளில் காலாவதி தேதி இல்லை என்றால், உடனடியாக அதை மெடிக்கல் ஷாப்பில் கொடுத்து விடுங்கள்..
பொதுவாக, சளிக்கான மருந்துகளில், அசிடமினோபென் என்ற வேதிப்பொருள் இருக்கும். இந்த வேதிப்பொருள், டைலினால் என்ற மருந்திலும் உள்ளது. எனவே உங்கள் குழந்தையின் சளிக்கு நீங்கள் டைலினால் கொடுத்தால், அவர்களின் உடலில் தேவையானதை விட இரண்டு மடங்கு அசிடமினோபென் சேர்ந்து விடும். இதனால் 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சளி மருந்து வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மருந்தை கட்டாயம் மற்றொரு குழந்தைக்கு கொடுக்க கூடாது. ஒரு வேலை இரு குழந்தைகளுக்கும் பிரச்சனை வேறாக இருந்தால், அந்த குழந்தையின் உடல்நலம் இன்னும் மோசமாகிவிடும்.
ஆய்வின் படி, அதிக எடையுள்ள குழந்தைகள் காஃபின் மற்றும் டெக்ரோமெதோர்ஃபோன் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை, சீரான உடல் எடை கொண்ட குழந்தைகளை காட்டிலும் அதிகளவில் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு அதிக வீரியம் உள்ள மருந்துகளை கொடுக்க வேண்டும். தொடர்ந்து மருந்துகளை கொடுத்துக்கொண்டே இருக்க கூடாது. அதே போல், ஒரு நாளைக்கு தேவையான மருந்துகளை விட அதிகளவு மருந்துகளையும் கொடுத்தாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.