'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..' தமிழ் சினிமாவின் கார்த்திகை தீப ஸ்பெஷல் பாடல்கள் இதோ..!!
இன்று உலகம் முழுவதும் கார்த்திகை தீபம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான கார்திகை தீப பாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம்..
வீரா : மலைக் கோயில் வாசலில்.. “மலை கோவில் வாசலில்..” பாடல் வீரா படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக மீனா மற்றும் ரோஜா ஆகியோர் நடித்திருப்பர். இப்பாடல் முழுவதும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டிருக்கும்.
சூர்யவம்சம் : நட்சத்திர ஜன்னல்.. “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குது..” பாடல் ஒளிக்காத இல்லங்களே இருக்காது. சூர்யவம்சம் படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலில் கடைசியில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து நடனமாடுவர். இதில் சரத்குமார், தேவையானி, ராதிகா உள்ளிட்டோர் நடித்திருப்பர்.
தேவ ராகம் : அழகிய கார்த்திகை தீபங்கள்.. ஸ்ரீதேவி, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ‘தேவராகம்’ படத்தில் "அழகிய கார்த்திகை தீபங்கள் ஆடும்” பாடல் இடம் பெற்றிருந்தது. எம்.எம் கீரவாணியின் இசையில் கே. எஸ். சித்ரா பாடிய இப்பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
தேவதை : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்.. 1997ஆம் ஆண்டு வெளியான “தேவதை” படத்தில் இடம் பெற்றிருந்த பாடல், “தீபங்கள் பேசும், திருக்கார்த்திகை மாதம்..” இப்பாடல் அனைத்து கார்த்திகை தீப திருநாட்களிலும் ஸ்பெஷலாக ஒலிக்கப்படும்.
மனசெல்லாம் : கையில் தீபம் ஏந்தி.. ஸ்ரீகாந்த்-த்ரிஷா நடிப்பில் வெளியான படம், மனசெல்லாம். இந்த படத்தில் “கையில் தீபம் ஏந்தி வந்தோம்..” என்ற பாடலிடம் பெற்றிருக்கும். பார்ப்பவர்களின் கண்கள் குளிரும் வகையில் இப்பாடல் முழுவதும் கார்த்திகை தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்.
வானத்தைப் போல : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..” பாடல், குடும்பங்கள் கொண்டாடும் பாடலாக பார்க்கப்படுகிறது. இது, வானத்தை போல படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த படத்தில் மீனா, விஜயகாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
Read more ; உஷார்!!! ஓடும் டாக்ஸியில் ஆடையை கழற்றி, வாலிபர் செய்த காரியம்..