முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’2026இல் கப்பு முக்கியம் பிகிலு’..!! சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜய்..? அவரே சொன்ன சூசக பதில்..!!

07:16 AM Nov 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றி விஜய் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கேள்வி பதிலின்போது, 2026இல் கப்பு முக்கியம் பிகிலு என்று பிகில் பட வசனத்தை பேசி பதில் கூறினார். இது 2026 சட்டமன்ற தேர்தலை குறிக்கிறதா என்று விவாதம் எழுந்துள்ளது.

Advertisement

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ. இப்படம் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் கடைசியாக பேசிய விஜய், தளபதி என்று ரசிகர்கள் தன்னை அழைப்பதற்கான அர்த்தத்தை விளக்கினார். அவர் பேசுகையில், ”மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், புரட்சி கலைஞர் விஜய்காந்த்னா ஒருத்தர்தான், உலகநாயகன்னா ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர்தான், தலனா அது ஒருத்தர்தான். அப்படித்தான் தளபதி. தளபதினா என்னனு உங்களுக்கு தெரியும்ல. உங்களுக்கு கீழ வேலை செய்ற தளபதி நான். மக்களாகிய நீங்கள்தான் மன்னர்கள். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்“ என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து விஜய்யிடம் சில கேள்விகளுக்கு பதில் கேட்கப்பட்டது. அப்போது 2026 என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய், 2025-க்கு அப்றம் வர வருஷம் என்ன? உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடக்கப் போகுது. இன்னும் சீரியஸாவா… 2026 கப்பு முக்கியம் பிகிலு என்று பதில் அளித்தார். 2026இல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு விஜய் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறியதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

Tags :
சட்டமன்ற தேர்தல்தேர்தல்நடிகர் விஜய்லியோ திரைப்பட வெற்றி விழாலோகேஷ் கனகராஜ்
Advertisement
Next Article