For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி!… விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?… எப்படி இருக்க வேண்டும்?… பலன்கள் என்ன?

05:31 PM Nov 13, 2023 IST | 1newsnationuser3
இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி … விரதம் யாரெல்லாம் இருக்கலாம் … எப்படி இருக்க வேண்டும் … பலன்கள் என்ன
Advertisement

ஆவணி பிறந்து விட்டால் சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானுக்கு விழா எடுப்பார்கள். அதை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்புத் திதியாகச் சொல்வர். அதே போல ஐப்பசி பிறந்து விட்டால் ஆறுமுகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதியாகும். சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.

Advertisement

சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசையில் வரும் கந்த சஷ்டி பெருவிழாவில் 6 நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விழா முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்து தெய்வானையை திருக்கல்யாணம் செய்வதுடன் முடிவடைகிறது. திருச்செந்தூரில் தான் முருகப்பெருமான சூரபத்மனை வதம் செய்து ஜெயந்தி நாதராக அருள் புரிகிறார்.

இதன் காரணமாக கந்த சஷ்டி பெருவிழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சென்று 6 நாட்கள் அங்கேயே தங்கி, விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை பார்த்து கடலில் நீராடி அடுத்த நாள் முருகனின் திருக்கல்யாணத்தை கண்டு களித்து வீடு திரும்புவர். கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது, எப்படி விரதம் இருக்க வேண்டும், விரதமிருப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த அண்டு கந்த சஷ்டி இன்று (நவம்பர் 13-ம்) தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி உடன் முடிவடைகிறது. நவம்பர் 13 (திங்கள்) கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. நவம்பர் 14 முதல் நவம்பர் 17 வரை முருக பெருமான் வேல் வாங்குதல், சூரபத்மனுக்கு தூது அனுப்புதல், போர் துவங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நாடக வடிவில் நடைபெறும். நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை சூரசம்ஹாரம் நிகழ்வு, நவம்பர் 19ம் தேதியான ஞாயிறு அன்று திருக்கல்யாணம் நிகழ்வுடன் முடிவடைகிறது.

கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ள பல முறைகள் உள்ளன. சிலர் ஆறு நாட்களும் வெறும் நீர் மட்டுமே அருந்தி சூரசம்ஹாரம் முடிந்த உடன் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பார்கள். சிலர் 6 நாட்களும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் மேற்கொள்வார்கள். சிலர் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்வது வழக்கம். சில 6-வது நாள் சூரசம்ஹாரம் அன்று மட்டும் எதையும் சாப்பிடாமல் இருந்து மறு திருக்கல்யாணம் செய்து விரதம் முடிப்பார்கள். இன்னும் சிலர் இளநீர் மட்டுமே அருந்தி விரதம் இருப்பார்கள். வேறு சிலர் வெறும் மிளகை மட்டும் சாப்பிட்டு மிளகு விரதம் இருப்பார்கள். கந்த சஷ்டி தொடக்க நாளில் ஒரு மிளகு, 2-வது நாளில் 2 மிளகு என 6-வது நாள் 6 மிளகு சாப்பிட்டு கடுமையான விரதம் மேற்கொள்வார்கள்.

ஆணவம், வன்மம், குரோதம், காமம் போன்ற தீய குணங்கள் விலகி நல்ல குணங்கள் நமக்கு கிடைக்கும். கந்த சஷ்டி விழாவில் சூரபத்மனை வதம் செய்து முருகப்பெருமான் வெற்றிக் கண்டது போல் இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் வரும் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் சஷ்டியில் விரதம் இருந்தா அகப்பையான கருப்பையில் குழந்தை பேறு கிடைக்கும் என்பது தான். எனவே குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தை கிடைக்கும். மேலும் 16 வகை செல்வங்களையும் முருகப்பெருமான் வழங்குவார்.

விரத நாட்களில் கந்த சஷ்டி கவசம் படிப்பது, முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்வது, திருப்புகழ் படிப்பது, ஓம் சரவண பவ என்று தினமும் 108 முறை எழுதுவது போன்றவற்றை செய்யலாம். முழு நம்பிக்கையுடன் விரதம் இருந்து வாழ்வில் வெற்றியையும், அனைத்து செல்வங்களையும் பெறலாம்.

Tags :
Advertisement