நீதிபதிகள் ஃபேஸ்புக்கில் இருக்கக்கூடாது!. துறவிகள் போல் வாழவேண்டும்!. உச்சநீதிமன்றம்!
Supreme Court: நீதிபதிகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் மற்றும் ஆன்லைனில் தீர்ப்புகள் குறித்து தங்கள் கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்; அவர்கள் ஒரு துறவியை போல வாழவேண்டும்; குதிரையை போல வேலை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அதிதி குமார் சர்மா, சரிதா சௌதரி ஆகிய இரு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நிதிமன்றத்தின் ஆலோசகராக செயல்படும் மூத்த வழக்கறிஞர் கௌரவ் அகர்வால், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் நீதிபதி ஒருவருக்கு எதிரான பல்வேறு புகார்கள் குறித்து நீதிபதிகள் முன் சமர்பித்தார். அதன்படி, சர்ச்சையில் சிக்கிய பெண் நீதிபதி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதித்துறையில் காட்டுமிராண்டித்தனம் மற்றும் ஆடம்பரத்திற்கு இடமில்லை என்று கூறினர். நீதிதுறை அதிகாரிகள், தீர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது. ஏனெனில், தீர்ப்பு குறித்து ஒத்த அல்லது வேறுபட்ட வகையில் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதால், வருங்காலத்தில் அத்தீர்ப்பை மேற்கோள் காட்டுவதில் சிக்கலாகும் என்று கூறினர்.
Readmore: காற்று மாசுபாடு!. ஆண்டுதோறும் 15 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கும் சோகம்!. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!