பெண்களுக்கு ஜாக்பாட்..!! உரிமைத்தொகை ரூ.2,500ஆக உயர்வு..!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!
அடுத்த மாதம் முதல் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஹேமந்த் சோரன் மீண்டும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, மீண்டும் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பதவி ஏற்புக்கு பின்னர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜார்க்கண்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதல் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உதவித்தொகை ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
பின்னர், இது தொடர்பான முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 49 வயதான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் முதலமைச்சராக பதவியேற்பது இது 4-வது முறையாகும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்டிருந்த ஹேமந்த் சோரன் 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.